ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்க கடுமையான சட்டம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு

chandrasekhar raoடெல்லிக்கு அடுத்த படியாக ஐதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் திட்டமிட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூணம் மால கொண்டையா தலைமையில் ஒரு குழுவை தெலுங்கானா அரசு நியமித்துள்ளது.

இக்குழு குஜராத், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியது. அங்குள்ள சட்ட திட்டங்களை அறிந்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தது. மேலும் சிங்கப்பூர் செல்லவும் முடிவு செய்து உள்ளது.

பெண்கள் வன் கொடுமைகளை தடுப்பதில் முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் தீவிரமாக உள்ளார்.

பெண்களை துண்புறுத்துபவர்களுக்கு வளைகுடா நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. பெண்களை போதை பொருளாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டி எடுக்கும் வகையிலும் சட்டம் உள்ளது. அது போன்ற சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார்.

இதற்காக மகளிர் போலீஸ் நிலையத்தை அதிகப்படுத்தவும், பெண் போலீசாரை கூடுதலாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top