ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது!

ரஷ்யாரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்க உள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக அமெரிக்காவின் 2 போர்கப்பல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தெற்கு ரஷ்யாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரஷ்யா அமெரிக்காவின் உதவியை நாடியது.

7 ஆண்டுகளுக்குபிறகு ரஷ்யாவில் நடக்கும் மிகப்பெரிய நிகழ்வாகும் இது. எனவே இந்த ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இதன் துவக்க விழா இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 3 பேர் பங்கேற்க உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top