சரிதாதேவி விவகாரம்: மேரிகோம் அதிருப்தி!

saritha deviஆசிய விளையாட்டில் நடுவர்களின் பாதகமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி விவகாரம் குறித்து சக நாட்டவரும், ஆசிய சாம்பியனுமான மேரிகோம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் சரிதாதேவியின் சர்ச்சை குறித்து மேற்கொண்டு எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவருக்காக நான் வருந்துகிறேன். அரைஇறுதியில் இவர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரது வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த விவகாரம் எழுந்தபோது அவருக்கு நான் முழுஆதரவு அளித்தேன். ஆனால் பதக்கத்தை வாங்க விருப்பமில்லை என்றால் அவர் பதக்க மேடைக்கு வராமல் இருந்திருக்கலாம்.

பதக்கம் அணிவிப்பு நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. இது மாதிரி சூழல் எனக்கு நேர்ந்திருந்தால் வேறு மாதிரி எதிர்ப்பு தெரிவித்திருப்பேன். இது எனது தனிப்பட்ட கருத்து தான் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top