ஐ படத்தின் டிரைலரை பார்த்து வியந்த ஷாருக்கான்

shahrukh khanபிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹேப்பி நியூ இயர்’. தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார் ஷாருக்கான்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ஐ படத்தின் டிரைலரை பார்த்த ஷாருக்கான், அப்படத்தில் ஷங்கரின் வேலையைக் கண்டு மிகவும் வியந்து போயுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஐ’ படம் வித்தியாசமான பாணியில் மிகப்பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை பார்த்து அசந்து போனேன் என்று கூறினார்.

ஷாருக்கான் நடித்துள்ள ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அபிஷேக் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஃபரா கான் இப்படத்தை இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகவிருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top