இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியா - நியூசிலாந்துஇந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 503 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கடைசி விக்கெட்டாக மெக்கல்லம் 224 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தியாவின் சார்பில் இஷாந்த்சர்மா 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி திணறல் ஆட்டம் ஆடி வருகிறது. புஜாரா 1 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும் ஆட்டத்தை இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் தவான் ரன் எதுவும் எடுக்காமல், முரளி விஜய் 26 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.இந்திய அணி சார்பில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top