தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

Mohan-Bhagwatஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ் சர்ச்சைக்குரிய இயக்கம் என்றும், மோகன் பகவத்தின் உரையை நேரடியாக ஒளிப்பரப்பியது தவறான முன் உதாரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீக் ஷித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை பிரசாரம் செய்வதற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தாக்குதல்கள் வேதனையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சர்ச்சை குறித்து பதிலளித்துள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் அர்ச்சனா தத், மற்ற செய்திகளை போலவே, மோகன் பகவத்தின் உரையையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியதாக தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top