யூ டியூபில் மூன்று கோடி பார்வையாளர்களை தாண்டியது பிரியங்கா சோப்ராவின் எக்சாட்டிக்.

பிரியங்கா சோப்ராபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பு, நடனம் தவிர பாடலும் நன்கு பாடும் திறமை கொண்டவர்.இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தபோது, உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலுக்கு சொந்த குரலிலேயே பாடி அசத்தினார்.

அதன் பின்பு அவர் பாலிவுட்டில் பிசியாகி விட்டதால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில் அவர் சொந்தக்குரலில் பாடி வெளியிட்டுள்ள எக்சாட்டிக்(Exotic) என்ற பாடல் யூ டியூபில் இதுவரை சுமார் 3 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இது குறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, உங்களது ஆதரவு மற்றும் அன்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். 3 கோடி பார்வையாளர்கள் என்பது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இதற்கு முன்பு இன் மை சிட்டி (in my city) என்ற பாடலை வில்லியம் என்ற அமெரிக்க பாடகருடன் இணைந்து பாடி வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.இம்முறை பிட்புல் என்பவருடன் இணைந்து பாடியிருக்கும் எக்சாட்டிக் பாடல் இவரது இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top