நடிகை ஸ்ரேயாவிற்கு பாலா இட்ட நிபந்தனை!

பாலா ஸ்ரேயாதமிழில் சிவாஜி,அழகிய தமிழ் மகன்,திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.இவர் இப்பொழுது பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கதைக்காக ஸ்ரேயாவை முறைப்படி கரகாட்டம் கற்றுகொள்ளும்படி கட்டளை இட்டுள்ளாராம் இயக்குநர் பாலா.

தமிழரின் நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தை மையமாக கொண்ட கதை என்பதால் நல்ல நடனம் ஆடத் தெரிந்த கதாநாயகி ஒருவரை தேடிவந்த பாலா ஸ்ரேயாவை இதில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.ஸ்ரேயாவும் தமிழில் தனக்கு தற்போது நல்ல வரவேற்பு இல்லாததால் பாலாவின் இவ் அழைப்பை ஏற்று படத்தில் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

ஸ்ரேயா எவ்வுளவுதான் மேற்கத்திய நடனம் நன்கு ஆடத் தெரிந்தவராக இருந்தாலும், முறையான பயிற்சி இல்லையெனில் அவரால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியாதாம்.அதனால் தான் இம்முடிவை எடுத்துள்ளாராம் பாலா.இதற்காக முறைப்படி கரகாட்ட பயிற்சி மேற்கொள்ள உள்ளாராம் ஸ்ரேயா.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார்.பாலாவுக்காக படத்திலுள்ள அணைத்து பாடல்களையும் குறுகிய காலத்திலேயே இசையமைத்து கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top