கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பேருந்துகள் நிறுத்தம்!

ksrtc--621x414சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கர்நாடக பஸ்கள் வந்து செல்கின்றன. பெங்களூரில் இருந்து சென்னை, வேலூர், ஆம்பூர், காஞ்சீபுரம், சென்னை வழியாக புதுச்சேரிக்கும் கர்நாடக மாநில பஸ்கள் மாநில பஸ்கள் வருகின்றன. 100–க்கும் அதிகமான பஸ்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்து போகின்றன. இன்று காலை சென்னையில் இருந்து கர்நாடகம் சென்ற பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

இன்று காலையில் இருந்தே அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பெங்களுர் சென்று தீர்ப்பு கூறப்பட்ட கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன அக்கரஹாரா பகுதியில் குவிந்து இருந்தனர். கூட்டம் அதிகமானதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பெங்களூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நீடித்தது

இந்த நிலையில், ஜெயலலிதா குற்றவாளி என்று சிறப்பு கோர்ட் அறிவித்த தால் பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. பெங்களுரில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் செல்லும் பஸ்களும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகா– தமிழ்நாடு இடையிலான பஸ் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பஸ்களும் நிறுத்தப்படடுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்களும் இன்று மாலை நிறுத்தப்பட்டன. இதானல் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top