சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்!

ஐநா சபைசிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவது தொடர்பாக வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாட்டிகன் நிர்வாகம் நியமித்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா. குழு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பாதிரியார்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top