இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்!

vijay mallyaஇந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்து கடனில் சிக்கியதால் மல்லையா கடன் ஏய்ப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரது சொத்து மதிப்பும் குறைந்தது. அதன் அடிப்படையில் நீக்கப்பட்டதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் மல்லையா. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 17 வங்கிகளுக்கு ரூ.7,600 கோடி வாங்கிய கடனை திருப்பி தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆண்டு மல்லையா உட்பட 11 பேர் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top