சென்னையில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி – தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு

rallyஇனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நா. மன்றத்தில் பேசவிருப்பதை கண்டித்து சென்னையில் நாளை (24.19.2014) நடைபெறவிருக்கும் பேரணிக்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

செம்படம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ள ஐ.நா. சபை மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் தொடங்கும் இந்த பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே!

2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்!

3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு!

4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு! இரட்டைக் குடியுரிமை வழங்கு!

5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top