அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்!

பாஸ்போர்ட்பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களில் பெறலாம். இந்த புதிய சேவை சிவகங்கையில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை குறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்ட அஞ்சல கண்காணிப்பாளர் சுவாமி நாதன் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மின்கட்டண வசூல், சோலார் லைட், மினி பிரிட்ஜ் விற்பனை, மீடியா போஸ்ட் மூலம் விளம்பரம் செய்தல், ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங், உடனடி மணியார்டர், மொபைல் போன் மூலம் பண பறிமாற்றம் மற்றும் இ-போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதில், 29 தலைமை அஞ்சலகங்களும், 7 முக்கியமான அலுவலகங்களும் அடங்கும். தபால் அலுவலகங்களில் ரூ.10 செலுத்தி பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டு அதை பூர்த்தி செய்து கவுண்டரில் கொடுத்து ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களில் உள்ள தவகல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ஏ.ஆர்.என். எனப்படும் ரசீது மற்றும் பாரத வங்கியின் படிவம் ஒன்று வழங்கப்படும். அதை பாஸ்போர்ட்டிற்கான பணத்தை கட்டிய பின் அஞ்சல் அலுவலகத்தில் ஏற்கனவே கட்டிய ரூ.100கான ரசீதுடன் சமிர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்தில், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி தேதி மற்றும் நேரம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் இந்த சேவை செயல்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு தலைமை அஞ்சலக அதிகாரியை தொடர்புகொள்ளலாம்” என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top