தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

10258126_372266386283324_7579408256738152761_nஇந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஊடக சனநாயகத்திற்க்கான கூட்டமைப்பு நடத்திய இந்த ஆர்பாட்டத்தில் மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, மக்கள் இணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுவுலை, ஏழு தமிழர்கள் விடுதலை, ஈழ விடுதலை போராட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் பொய் செய்திகளை ஊடகங்கள் பரப்பி வருவதற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

10258126_372266386283324_7579408256738152761_n10527875_372232306286732_4095952946744169250_n 10336601_372266396283323_5410236330437517017_n 10710568_372257229617573_3920272608825578998_n


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top