மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக தனித்து போட்டியிட முடிவு?

Bags-at-BJP-hea18788தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எற்படவில்லை.

150 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட சிவசேனா திட்டமிட்டுள்ளது. ஆனால் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் எஞ்சிய 18 தொகுதிகளை மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதனை ஏற்க சிவசேனா மறுப்பு தெரிவித்து விட்டதால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீட்டித்து வருகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top