சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹன்சிகா.

சிம்பு ஹன்சிகாகடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்பு நண்பர்களோடு தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்.

சிம்பு, ஹன்சிகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாக அறிவித்தனர்.இந்நிலையில், இவ்விருவருக்குமிடையே காதல் முடிவுக்கு வந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.ஆனால் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு அவரது காதலை மீண்டும் நிரூபித்துள்ளார் ஹன்சிகா.

முன்னதாக ஹன்சிகாவின் பிறந்தநாளன்று, அரண்மனை வடிவத்தில் கேக் ஒன்றை அனுப்பி வைத்து சிம்பு ஹன்சிகாவின் மீதான தனது காதலை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு பரிசாக தான் நடிக்கும் கெளதம் மேனன் படத்தின் டீஸரையும், ‘வாலு’ படத்தின் (U R MY DARLING) பாடலையும் வெளியிட்டுள்ளார் சிம்பு.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top