தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை: நாளை முதல் துவக்கம்!

Indian-passportநாடு முழுவதும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை நாளை முதல் துவங்கப்பட உள்ளது.

செல்போன் வருகைக்கு பின்னர் தபால் துறை பெரும் பாதிப்பை சந்தித்தாலும் அவற்றை ஈடுகட்ட பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் கட்டண வசூல், சோலார் விளக்கு, மற்றும் மினி பிரிட்ஜ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு, உடனடி மணியார்டர், செல்போன் மூலம் பண பரிவர்த்தனை போன்ற பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இ போஸ்ட் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவங்கப்பட உள்ளது. 29 தலைமை தபால் நிலையங்கள் உள்பட 36க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் கூறுகையில், நெல்லையைப் பொறுத்தவரை நெல்லை, பாளை, அம்பை ஆகிய தலைமை தபால் நிலையங்களில் நாளை முதல் பாஸ்போர்ட் சேவை துவங்கப்பட உள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தினை ரூ.10 கொடுத்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அதே தலைமை தபால் நிலையத்தில் ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவுடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செல்லான் வழங்கப்படும். அதன் பின்னர் செல்லான் மூலம் எஸ்பிஐ வங்கியில் உரிய கட்டணம் செலுத்திய பின்னர் ஏற்கனவே விண்ணப்பம் பெற்ற தபால் நிலையத்துக்கு சென்று நேர்காணலுக்கான நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top