லடாக் பகுதியில் வாக்குறுதியை மீறி சீன ராணுவம் முகாம்: எல்லைப் பகுதியில் பதற்றம்

India_China_Ladakh_pic_295அதிபர் ஸி ஜின்பிங்கின் வாக்குறுதியையும் மீறி சீன ராணுவம் லடாக் பகுதியில் முகாமிட்டிருப்பதால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

காஷ்மீரின் எல்லைப்பகுதியான ச்சுமர் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கடந்த வாரம் ஊடுருவினர். இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஸி ஜின்பிங்கிடம் இப்பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி எழுப்பினார். அப்போது, ராணுவத்தினர் உடனே திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என ஸி ஜின்பிங் வாக்குறுதியளித்தார். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே பிரச்னை எழுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எனினும் இதுவரை சீன ராணுவத்தினர் ச்சுமர் பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

பிரச்னை, உயர் மட்ட அளவிலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், தீர்வு கிடைக்காததால், இரு நாடுகள் இடையே மீண்டும் கொடி அமர்வு கூட்டம் நடத்தும் சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ச்சுமர் பகுதி தங்கள் நாட்டிற்கு சொந்தமானது எனக்கூறி, சீனப் படையினர் சுமார் 1000 பேர் கடந்த சில தினங்களாக, அங்கு முகாமிட்டிருக்கிறார்கள்.

அங்கு சாலை அமைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. திரும்பிச் செல்லுமாறு பல முறை எச்சரித்த பின்னரும், சீன ராணுவத்தினர் அதனை ஏற்காமல் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top