பாஸ்போர்ட் பெற தபால் நிலையத்தில் விண்ணப்பம் செய்யலாம்: மண்டல அதிகாரி தகவல்

e78a5b92-bb17-45c1-baa1-f0b4bbe9ae7b_S_secvpfபாஸ்போர்ட் பெற தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மண்டல அதிகாரி கூறியுள்ளார்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, முன் பதிவு செய்வதற்கான வசதி கீழ் கண்ட தபால் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக தபால் நிலையங்களில் ரூ.100 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதன்படி, திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை, நாகர்கோவில், தக்கலை, காரைக்குடி, தேவகோட்டை, கோவில்பட்டி, சங்கரன் கோவில், தென்காசி, மதுரை, தல்லாகுளம், அரசரடி, ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பெரியகுளம், போடி, நெல்லை, பாளையங்கோட்டை, அம்பா சமுத்திரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தேனி, ராமேசுவரம், அபிராமம், கீழக்கரை, நெய்யூர், மார்த்தாண்டம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top