ஸ்ரீலங்காவின் செல்லப்பிள்ளை லைகா சுபாஷ்கரன் – ஹரிஹரன்

லைகாவின் முதலாளி சுபாஸ்கரன் தனது இரண்டு நாள் வருமானத்தில் எடுக்கும் படத்தை குறித்த சர்ச்சைகளின் கீழ் பதிலளிக்கும் பொழுது ராஜபக்சேவுடன் தான் இல்லை என்பதை சொல்வதற்காக தனக்கு சாதகமான விசயங்களை மட்டுமே பேசினார். அதாவது காமென்வெல்த் மாநாட்டு நிகழ்வில் ராஜபக்சேவின் படம் போட்டோ ஷாப்பில் எடிட் செய்யப்பட்டது என்றார், ஆனால் காமென்வெல்த் மாநாட்டின் கோல்டன் ஸ்பான்சர் என்பதில் தான் ஒரு வணிக நிறுவனமாக அதில் கலந்து கொண்டேன் என்பதை சொல்லாமல் சொன்னார், என்ன மற்றவர்கள் எல்லாம் சாதரணமான ஒரு பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டால் இவர் கோல்டன் ஸ்பான்ஸராக கலந்து கொண்டார்.

lyca

பிறகு நான் பல கோடி ரூபாயை ஈழத்தில் இருக்கும் தமிழர்களுகாக சம்பாதித்து செலவு செய்கிறேன் என்று கழிவிரக்கம் தேடினார். ஆனால் ராஜபக்சே அக்கா மகனுடன் சேர்ந்து இலங்கையில் நடத்தும் ஸ்கைடெல் நிறுவனத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். பலர் இவர் இலங்கையில் அதுவும் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு உதவி புரிகிறார் என்று கொஞ்சம் கருணை காட்டலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதன் பின்னாலும் இலங்கை அரசின் கூட்டாளியாகத் தான் இருக்கிறார்.

அந்த ஞானம் பவுண்டேசன் யார் என்ன என்று தேடினால் பெரிய கோல்மால்கள் எல்லாம் வெளிவருகிறது, ஒரு சாதரண வருமான வரி செலுத்துபவனாக இந்தியாவில் பாரம் 80G மூலமாக நான் செலுத்தும் நன்கொடைகளை வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். அதே போல்தான் பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் இத்தகைய வரிவிலக்கு பெருவதற்கான வழிவகைகள் உண்டு. அதன் கீழாகவே இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக ஞானம் பவுண்டேசன் உள்ளது. மேலும் இங்கிலாந்து இளவரசரால் நடத்தப்படும் பிரின்ஸ் சாரிட்டியின் ஒரு பிரிவான தி பிரிட்டிஷ் ஏசியன் ட்ரஸ்ட் மூலமாக ஆசிய நாடுகளில் மக்களை முன்னேற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த பிரின்ஸ் சாரிட்டி என்பது இங்கிலாந்து மட்டுமில்லை சர்வதேச அளவிலும் மிகப்பெரும் பெயர் படைத்த ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பெரும் தொழில் அதிபர்களை தங்களின் அலோசகர்களாக நியமித்துக்கொண்டு அங்கு தங்களது சேவைகளை செய்து வருகிறது. மேலும் மிகப் பெரிய விளையாட்டு வீரர்கள், புகழ்பெற்ற நடிகர்கள் போன்றவர்களை தங்களது ப்ராண்ட் அம்பாஸிட்ர்களாக நியமித்துள்ளனர்.

addresslondonதி பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்ட் தனது வேலைகளை அனைத்து நாடுகளிலும் செய்து வருகிறது இந்தியாவிற்கான ஆலோசகராக முகேஷ் அம்பானி நியமிக்கப்பட்டு அவரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. அப்படியே, இலங்கைக்கான ஆலோசகர்களில் ஒருவராக சுபாஷ்கரன் செயல்படுகிறார், ஞானம் பவுண்டேசன் தி பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்ட் இரண்டும் இணைந்து அடுத்த மூன்று வருடங்களுக்கு பணியாற்றவிருக்கின்றன. இதற்கான ஒப்பந்தமாகதான் தி பிரிட்டிஷ் ஏசியன் ட்ரஸ்டுக்கு ஒரு மில்லியன் பவுண்ட்கள் நான்கு வருடத்தில் கொடுப்பதாகவும், அதன் முன்பணமாக்  சுபாஷ்கரன் முத்தையா முரளிதரனிடம் கொடுத்த 2,50,000 பவுண்ட் பணமானது பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்டுக்கு கொடுத்த நன்கொடையே. ஞானம் பவுண்டேசன் என்பது தி பிரிட்டிஷ் ஆசியன் பவுண்டேசன் மூலமாக தமிழீழத்தில் தனது சேவைகளை வழங்கிக் கொண்டுள்ளது. இதில் ஞானம் எவ்வளவு செலவு செய்தது தி பிரிட்டிஷ் ஏசியன் எவ்வளவு பணம் கொடுத்தது என்ற தகவல்கள் எதுவும் இல்லை.

இலங்கையில் அரசு சாரா நிறுவனங்கள் (NGO) பதிவு செய்யப்பட வேண்டும் இப்படி பதிவு செய்து 1428 நிறுவனங்கள் உள்ளன, அவைகளின் கணக்கு வழக்குகளும் இலங்கை அரசாங்கத்திடம் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ஞானம் பவுண்டேசன் ஒரு அரசு சாரா நிறுவனமாக (NGO) இது வரை பதிவு செய்யப்படவில்லை. 2005லிருந்து பல அரசு சாரா நிறுவன்ங்களின் அனுமதி இலங்கையில் பணிபுரிய ரத்து செய்யப்பட்டுள்ளது அவற்றில் குறிப்பிட தக்கவை என்றால்.

International Medical Corps – இது ஒரு சர்வதேச மருத்துவ உதவி நிறுவனம், உலகம் முழுவதும் மருத்துவர்களையும் தாதிகளையும் மக்களுக்காக தொண்டுகள் புரிந்திட தன்னகத்தே கொண்ட நிறுவனம்.

Medicins Sans Frontiers-spain – ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் வரை சென்று பேசுவதற்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு நிறுவனம், எல்லை கடந்த மருத்துவர்கள் (Doctors without borders) போன்ற எந்தவிதப் போர்ச் சூழலிலும் பணி புரியும் அமைப்பும் இவர்களின் கீழ் தான் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் அனுமதியும் 2005ம் ஆண்டிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Redd Barna – சேவ் த சில்ட்ரன் என்ற சர்வதேச அமைப்பின் நார்வே பிரிவு, இந்த அமைப்பு குழந்தைகள் நலனை பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம். இதுவும் 2005ம் ஆண்டிலிருந்து இலங்கையில் பணி புரியும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்படி சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பல இலங்கையில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள பொழுதிலும், எந்தவிதத்திலும் இலங்கையின் சட்டத்திட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படாத ஞானம் பவுண்டேசன் தனது பணிகளை தொடர எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்பது ஒரு புரியாத புதிர். அதுவும் இரண்டு நாட்களில் 8 இடங்களில் தனது அலுவலகங்களை திறக்கிறது, மிகவும் முக்கியமாக ஈழத்தின் வடக்கு கிழக்கு மாகணங்களில். அங்கு மக்கள் முழுவதும் இராணுவமயமாக்கப்பட்டு 6 ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிங்கள இராணுவ வீரன் என்ற கணக்கில் இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கும் இடத்தில், இலங்கை அரசின் சட்டதிட்டங்களுக்குள் பதிவு செய்யாமல் ஒரு நிறுவனம் தனது அலுவலகத்தை திறப்பது என்பது எந்த அடிப்படையிலானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஞானம் பவுண்டேசன் தனது சேவைகளுக்கான பணத்தேவைகளை எப்படி இலங்கையினுள் கொண்டு வருகிறது அதன் கணக்கு வழக்குகள் என்ன என்பதும் இது வரை கணக்கு காட்டப்படவில்லை என்பதே நிதர்சனம். ஞானம் பவுண்டேசன் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்று அதன் அதிபர் சுபாஷ்கரன் சொல்கிறார், இங்கிலாந்திலிருந்து எந்த வழியில் இலங்கைக்கு தனது சேவைகளுக்கான பணத்தை கொண்டு வருகிறார் என்பது தெரியவில்லை. இவர்களின் கூற்றுப்படி மொத்தம் 3000 மில்லியன் பணம் செலவிட இருக்கிறோம் என்கிறார்கள் இது ஒட்டுமொத்தமாக 300கோடி ரூபாய். பிரிட்டிஷ் ஏசியன் ட்ரஸ்டுக்கு 1 மில்லியன் பவுண்ட் நான்கு வருடங்களில் கொடுக்கிறேன் என்று ஒத்துக் கொண்டுள்ளார் இதில் பிரிட்டிஷ் ஏசியனுடன் இணைந்து இலங்கையில் நடத்தும் சேவைகளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை, இல்லை பிரிட்டிஷ் ஏசியனுக்கு சொன்ன தொகையும் ஞானம் பவுண்டேசன் தொகையும் ஒன்றா என்பதும் புரியவில்லை. மேலும் இலங்கைக்குள் இப்படி 300 கோடி ரூபாயை கடத்தி வந்தால் எந்த ஒரு அரசாங்கமாவது சும்மா விடுமா என்பதையும் யோசிக்க வேண்டியதுள்ளது.

ஆனால் எந்தவித இலங்கை சட்டவிதிகளையும் பின்பற்றாமல் இலங்கைக்குள் இலங்கை இராணுவத்தின் ஹெலிகாப்டரையே வாடகைக்கு எடுத்து சுற்றி வருவதை பார்த்தால் ஞானம் பவுண்டேசனும் சுபாஷ்கரனும் இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இலங்கைக்குள் உலா வந்து கொண்டு இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

ஆதாரம்..

இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரம்..
(அ) இதில் ஞானம் பவுண்டேசன் பெயர் எங்குமே இல்லை.. இலங்கை அரசின அதிகார்ப்பூர்வமான இணையதளம்…
http://www.ngosecretariat.gov.lk/web/index.php?option=com_statistics&Itemid=67&lang=en

(ஆ) அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிறுவன்ங்கள் பெயர்கள்

http://www.ngosecretariat.gov.lk/web/images/downloads/de_registered_ngos.pdf

(இ) இலங்கை ஊடகத்தில் இந்த ஞானம் பவுண்டேசன் பற்றி செப்டம்பர் 14ம் தேதி, 2014 வந்த கட்டுரை..
http://www.ceylontoday.lk/51-72966-news-detail-can-charity-be-so-special.html

– ஹரிஹரன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top