விஜய்யுடன் ஜோடி சேர்வாரா தீபிகா படுகோன்?

தீபிகா படுகோன்‘ஜில்லா’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். படத்துக்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இப்படத்தை பி.டி. செல்வகுமார், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

படத்திற்கான ஹீரோயினை தேர்தெடுக்கும் வேலை தீவிரமாக நடை பெற்று வருகிறது.இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனைத் தேர்வு செய்து இருக்கிறார்காளாம்.

தீபிகா படுகோன் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாரா என்பது பற்றி தகவல்கள் ஏதும் இன்னும் சரிவர தெரியவில்லை. வருகிற மே அல்லது ஜூன் மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top