“கள்ள படம்” இயக்குநர் மிஸ்கினின் அடுத்த படைப்பு.

மிஸ்கின்இயக்குநர் மிஸ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு “கள்ள படம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிஸ்கின் இயக்கதில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”. இப்படத்தை தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு “கள்ள படம்” எனப் பெயர் வைத்துள்ளாராம் மிஸ்கின்.

சொந்தமாக திரைப்படம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கும் நான்கு தொழில்நுட்பக் கலைஞர்களை பற்றிய கதை.படத்தில் இயக்குனர் கதாபாத்திரத்தில் மிஸ்கினின் அசிஸ்டன்ட் வடிவேலும்,காமிரா மேனாக ஸ்ரீராம் சந்தோஷ் என்பவரும், இசையமைப்பாளர் வேடத்தில் கே-வும், எடிட்டராக காகின் என்பவரும் நடிக்க உள்ளனர்.இதில் சிறப்பு என்னவெனில், இவர்கள் அனைவருமே சமந்தப்பட்ட துறையில் நிஜ வாழ்க்கையிலும் பணியாற்றி வருவது தான்.

படத்தில் கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா நடிக்கவுள்ளார். இதுதவிர முக்கிய வேடத்தில் மிஸ்கினும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.படத்தில் நடிப்பதோடு கூடுதலாக இசையையும் அமைக்க உள்ளார் கே.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top