ஸ்ருதிஹாசன் நடித்த “டி டே” படம் தமிழில் நிச்சயம் குறித்த தேதியில் வெளிவரும்: தயாரிப்பாளர் பதிலடி.

டி டேஇந்தியில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்து வெளிவந்தப் படம் ‘டி டே’.இப்படத்தை தமிழில் திரையிட ஸ்ருதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார், ஆனால் குறித்த தேதியில் “தாவூத்” என்ற பெயரில் தமிழில் இப்படம் திரையிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விவேக் ரங்காச்சாரி தெரிவித்துள்ளார்.

படத்தை எந்த மொழியிலும் திரையிடுவதற்கான முழு உரிமையும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தம்.இதில் தலையிடுவதற்கு படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசனுக்கு எந்தவித உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவது பற்றி படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான நிகில் அத்வானியுடன் தான் ஏற்கனவே பேசி விட்டதாகவும்,எனவே வருகிற 7ந் தேதி திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகும் எனவும் ரங்காச்சாரி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top