ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா முடிவு!

sania_mirzaஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முடிவு செய்துள்ளார்.

தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக ஆசிய போட்டியில் பங்கேற்பதை விரும்பவில்லை.

சோம்தேவைத் தொடர்ந்து லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஆகியோர் ஆசிய போட்டியில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்தை இந்திய டென்னிஸ் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டது.

எனவே, அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு பதக்க வாய்ப்பு குறைவு என்று விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட சானியா மிர்சா முடிவு செய்துள்ளார். இதனை அகில இந்திய டென்னிஸ் சங்கம் இன்று உறுதி செய்துள்ளது.

முன்னதாக, சானியா மிர்சா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் அவரது தாயார் நசீமாவும் உடனிருந்தார். அப்போது, அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top