இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்தியா-நியூசிலாந்து  டெஸ்ட் கிரிக்கெட்இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.

தொடர்ச்சியான தோல்வியின் எதிரொலியாக இந்தியா அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்து 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் இந்தியா–நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.இந்திய அணியை அச்சுறுத்துவதற்காக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஆடுகளங்களை அமைப்பதே சரியாக இருக்கும் என நியூசிலாந்து பயிற்சியாளர் மைக்ஹெசன் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கு புஜாரா, ஜாகீர்கான் ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். அதே போல் பயிற்சி ஆட்டத்தில் அசத்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.இந்திய அணியை பொறுத்த வரை விராட் கோலி, கேப்டன் டோனி, புஜாரா ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் பார்மின்றி தவித்து வருகின்றனர்.

இந்தியா–நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக்லாந்திலும் (பிப்.6–10), 2–வது டெஸ்ட் வெலிங்டனிலும் (பிப்.14–18) நடக்கிறது. இவ்விரு டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top