2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங்தான் பொறுப்பு: வினோத் ராய் குற்றச்சாட்டு!

வினோத் ராய்2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்தபோது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது.

இந்த இரு ஊழல் வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் மத்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரங்களில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க மன்மோகன் சிங்குக்கு எந்த வழியும் இல்லை. 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் மன்மோகன் சிங் பதில் எழுதி இருக்கிறார்.

நான் எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து ஒரு பதில் கூட கிடையாது. ஒரு சமயம் நான் அவரை சந்தித்தபோது, ”என்னிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள் என கருதுகிறேன்” என்று கூறினார். அந்த சமயத்தில் அவர் ஆ.ராசாவுக்கு ஒரு நாளைக்கு இருமுறை பதில் அளித்தார். அப்படி இருக்கும்போது, எடுக்கப்பட்ட முடிவுகளில் அவர் எப்படி பொறுப்பாளி ஆகாமல் இருக்க முடியும்?

கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட முடியாது. அதுதான் அவருக்கு மிகுந்த கவலையாகிவிட்டது. அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு செய்த முறை தவறானது என்று நவம்பர் 16 ஆம் தேதி மன்மோகன் சிங் என்னிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம், ”எங்கள் மதிப்பீடு சரியான முறையில் செய்யப்பட்டது தான், அது நீங்கள் எங்களுக்கு சொல்லி கொடுத்த முறைதான்” என்று தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top