சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு: குஜராத் முன்னாள் டி.ஜி.பி. வன்சாராவுக்கு ஜாமின்

a21031b1-08a4-4ee4-bc87-0924302f9402_S_secvpfசொராபுதீன் ஷேக் “போலி’ என்கவுன்ட்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி.யான வன்சாராவுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் காந்திநகரில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர்பீ ஆகியோரை வலுக்கட்டாயமாக கொண்டு சென்று போலீஸார் சுட்டுக் கொன்றதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வன்சாரா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீதான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது வான்சாராவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக வன்சாரா தனது பணியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அபய் சூடாஸ்மாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவருக்கு ஜாமின் கிடைத்தவுடன் குஜராத் அரசு மீண்டும் பணி வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top