கிரானைட் ஊழல் விசாரிக்க சகாயம் தலைமையில் குழு: ஐகோர்ட் உத்தரவு!

SAGAYAMகிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க குழு அமைக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்ததோடு, 2 மாதத்தில் விசாரணை அறிக்கையை  தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை அடிக்கடி இடம் மாற்றம் செய்வது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top