தே.மு.தி.க. நிர்வாகிகள் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு!

vijayakanthதே.மு.தி.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தே.மு.தி.க.வின் நீலகிரி மாவட்ட செயலாளராக எல்.கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் தெற்கு மாவட்டம் சங்கராபுரம் ஒன்றிய செயலாளராக கே.அண்ணாதுரை ஆகியோர் இன்று (நேற்று) முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இதேபோல், நீலகிரி மாவட்ட அவை தலைவர் எல்.கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் எம்.ஆர்.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் கே.அண்ணாதுரை, சங்கராபுரம் ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஏ.செந்தில் ராஜா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஜவகர், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றிய பொருளாளர் என்.ஆர்.அழகுசுந்தரம் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top