புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை: தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்

praveenkumarதமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி அடுத்த மாதம் அக்டோபர் மாதம் 15–ந் தேதி தொடங்குகிறது.

இந்த கால கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்துவது, முகவரி மாற்றம் போன்ற பல திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

இந்த பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 2 அதிகாரிகள் வீதம் மொத்தம் 64 பேர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து விளக்கமளித்து பேசினார். அப்போது பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

வரும் ஜனவரி 1–ந் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 15–ந் தேதி முதல் நவம்பர் 10–ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும் ஜனவரி 5–ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி புதிதாக சேர்க்கப்பட்ட 12 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதியில் இவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படும்.

வண்ண அடையாள அட்டை வழங்கும் பணிக்காக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என 5 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்கனவே 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர் இடம் பெற மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

ஒரு வாக்காளருக்கு 2 இடங்களில் பெயர் இருந்தால் அதை கண்டுபிடித்து நீக்குவதற்காக புதிய சாப்ட்வேர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு ஒரு இடத்தில் தான் பெயர் இருக்கும்.

தேர்தல் அதிகாரிகளுக்கு 2–வது கட்ட பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் தொடங்கும். இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தங்களுக்கு கீழ்உள்ள மற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top