தமிழக மீனவர்கள் 57 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

rameswaram fishermenதமிழக மீனவர்கள் 57 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 30 மீனவர்களையும் அவர்களின் 6 படகுகளையும் சிறைபிடிந்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 30 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், நாகை மாவட்டம் பூம்புகார் பகுதி மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், பூம்புகர் மீனவர்கள் 23 பேரையும் அவர்களின் ஒரு விசைப்படகையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட பூம்புகார் மீன்வர்கள் 23 பேரையும் அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் வைத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள நிலையில், தற்போது மேலும் 53 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top