உள்ளாட்சி இடைத் தேர்தல்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Chennai High courtஉள்ளாட்சி இடைத் தேர்தலில் மீண்டும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிராக கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், விடுமுறை நாட்களில் வேட்பு மனு தாக்கல செய்யலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும் ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில் விரிவான விளக்கம் இல்லாததால், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top