அவமதிப்பு வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு ஐகோர்ட் கண்டிப்பு!

commissonar george 200a(4)அவமதிப்பு வழக்கில் பிற்பகலுக்குள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

சென்னையில் சாலையோரங்களில் சிலைகள் வைப்பது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜார்ஜுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த முறை பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தும் காவல்துறை ஆணையர் தாக்கல் செய்யாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், அவமதிப்பு வழக்கில் இன்று பிற்பகலுக்குள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும் என்று கண்டிப்புடன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top