பட்டாசு ஆலை அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலி!

No-limit-fireவிருதுநகர் அருகே முறைகேடாக பட்டாசு தயாரிப்பின்போது நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

விருதுநகர் அருகே உள்ள காரிச்சேரியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு அருகே உள்ள கட்டடம் ஒன்றில், முறைகேடான வகையில்  பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top