தமிழக மீனவர்கள் 6 பேருக்கு 24 ஆம் தேதி வரை சிறை!

fishermenஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரையும், இம்மாதம் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகினையும் அதில் இருந்த மீனவர்கள் டோனா, ஜான்சன், செல்வராஜ், கிளாடி, பிரான்சிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகிய 6 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின், சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்தி கனகரத்தினம், மீனவர்கள் 6 பேரையும் இம்மாதம் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top