முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு: கேரள அரசின் மறுஆய்வு மனு விசாரணை ஒத்திவைப்பு!

201406102211037599_opening-of-additional-water-from-the-mullaperiyar-dam-power_SECVPFமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனையடுத்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், கடந்த 1886 ஆம் ஆண்டு சென்னை மாகாணம்- திருவிதாங்கூர் சமஸ்தானம் இடையேயான ஒப்பந்தம் செல்லாது எனவும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தக் கூடாது எனவும் கேரளம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான நீதிபதிகள் குழு தவறான கணக்கீடுகளை கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுகள் நடத்தியுள்ளது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் அறையில் ஆலோசிக்காமல், நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேரள சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி தத்து விடுப்பில் இருப்பதால், மனு மீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top