தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங் தகவல்

மன்மோகன் சிங்இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்குகிறது. வருகின்ற 21 ஆம் தேதி வர்ரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 12 அமர்வுகள் நடக்கவுள்ளன. இதில், சர்ச்சைக்குரிய தெலங்கானா தனி மாநில மசோதா உட்பட 39 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இடைக்கால ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்து நிறைவேற்ற உள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத், அனைத்து கட்சி தலைவர்களை கூட்டி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் நேற்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் மன்மோகன் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ”நிச்சயமாக முக்கியமான தெலங்கானா பிரச்னை இந்த கூட்டத் தொடரில் வரும். பல்லாண்டு காலமாக நடந்து வந்த நீண்ட விவாதத்துக்கு பிறகு, நாடாளுமன்றம் விவேகமாக செயலாற்றி, மசோதாவை நிறைவேற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top