ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும்: டெசோ கூட்டத்தில் கருணாநிதி பேச்சு!

i-have-not-politicised-rajiv-gandhi-convicts-release-issue-karunanidhi_210414045452ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருவதோடு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்க அனுமதி தரக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதித்து விசா வழங்க வேண்டும். ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலகட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்க, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ”இலங்கை தமிழர்களின் உரிமைகளை நாம் வென்றெடுத்து அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருப்போம். பக்கத்து நாட்டில் உள்ள நமது தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே கையாண்டு வரும் வழி வன்முறை வழி. அவரின் வழியில் அல்லாமல் அமைதியான வழியில் தொடர்ந்து அனைவரும் போராடினால், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க முடியும். இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றால் தான், ராஜபக்சேவின் செவிகளுக்கு நம் கோரிக்கைகள் சென்று சேரும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top