யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சட்டரீதியில் போராட்டம்: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

Kingfisher-Airlines-யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முடிவுக்கு எதிராக சட்ட ரீதியில் தீவிரமாக போராடப்போவதாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடனை வேண்டுமென்றே திரும்பக் கட்டாமல் ஏமாற்றும் நிறுவனம் என கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மீதான அறிவிப்புக்கு தடை கோரி கிங்ஃபிஷர் நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து கிங்ஃபிஷர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விவகாரத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top