பிரதமர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: நவாஸ் ஷெரீப் திட்டவட்டம்!

sharif_AFP_2088520gநாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைக் கலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் தமது பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்வட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை), பிரதமர் நவாஸ் ஷெரீபும் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் உடனான சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நவாஸ் பதவி விலகுமாறு ரஹீல் அறிவுறுத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த துனியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அதில், தற்காலிகமாக 3 மாத காலம் பதவியில் இருந்து விலகி இருக்கும்படியும், இந்த காலக் கட்டத்தில் தேர்தல் முறைகேடு புகார் குறித்து விசாரணை மெற்கொள்ளலாம் என்றும் ராணுவ தளபதி ஆலோசனை வழங்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ராணுவமும் மறுத்தன.

இந்த நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக அரசியல் கட்சிகள் சிலவற்றின தலைவர்கள் உடனான சந்திப்பின்போது அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷேரீப், “நமது அரசியலமைப்பு சட்டத்தை யாரும் சிதைக்க அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்ததாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது தற்காலிகமாக விடுப்பு எடுத்துக் கொள்ளவோ முடியாது என்று ஷெரீப் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாகவும், அதனால் அவரது வெற்றி செல்லாது என்று கூறி, பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று கூறி கடந்த 20 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இம்ரான்கான் கட்சியும், மதகுரு தாஹிரி உல் காத்ரி கட்சியும் மேற்கொள்ளும் போராட்டம் வலுத்து, தலைநகர் இஸ்லாமாபாதில் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top