பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3பேர் பலி!

pakistanபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளை ஈடுபடுத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக கூறி, பிரதமர் பதவியில் இருந்து அவரை விலக வலியுறுத்தி அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டத்தில், நேற்று வன்முறை வெடித்தது.

நவாஸ் ஷெரிப் வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் பதவி விலகினாலும் போராட்டம் தொடரும் என பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியின் தலைவர் தாஹிர் உல் கத்ரி தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அத்துமீறலின் உச்சகட்டம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனிடையே போராட்டத்தின் போது பேசிய தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், ஜனநாயகத்தை நிலைநாட்ட தன்னுடன் இணைந்து போராட முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ராவல்பிண்டியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படையினரை வரவழைப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று தெரிவித்த ராணுவ அதிகாரிகள், ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top