மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி!

ukhrul6-800x450மணிப்பூரில், ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ருல் மாவட்டத்தில் பல இடங்களில் பேரணி நடத்தப்பட்டது.

அதில் உக்ருலில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் சென்றதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் பலியாயினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top