ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ல் ரிலீஸ்!

ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.ரஜினிகாந்த், தந்தை-மகனாக இரண்டு வேடங்களில் நடித்து, கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில், சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராத், ரமேஷ் கண்ணா, தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் படங்களான “அவதார்’, “டின் டின்’, “பிஉல்ஃப்’ போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட “போட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்தியப் படம் இதுதான்.

3டி அனிமேஷனில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்று வந்தன. கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்ததை அடுத்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த படம் தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, போஜ்புரி, வங்காளம், பஞ்சாபி ஆகிய 7 மொழிகளில் திரைக்கு வருகிறது. இதை தவிர, ஆங்கிலத்திலும் தயாராகியிருக்கிறது.

அனைத்துப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top