மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம்: மன்மோகன் சிங் தகவல்.

மன்மோகன் சிங்தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 1,450 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஜம்முவில் 101-வது அகில இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவிகிதம் அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ச்சியாக தமிழக மக்களுக்கு தீங்கிழைக்கும் திட்டங்களான அணுவுலை, மீத்தேன், கெயில் போன்ற திட்டங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துவரும் சூழலில் மெம்மேலும் ஆபத்தான நியூட்ரினோ போன்ற திட்டங்களை தமிழகத்தின் மீது திணித்து வருவது கண்டனத்திற்குரியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top