இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்திய இளையராஜா!

இளையராஜாவழக்கமாக திரைப்பட துறையில் ஞாயிற்று கிழமை மட்டும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை நாள்.ஆனால் ஞாயிற்று கிழமை கூட விடுமுறை எடுக்காமல் வேலை பார்த்தது இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியுள்ளாராம் இசைஞானி இளையராஜா.

டைரக்டர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் இசைஞானி இளையராஜா.தற்பொழுது அழிந்து வரும் நாட்டுபுற கலையான கரகாட்டத்தை மையமாக கொண்டு படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் பாலா.இதில் இயக்குநர் மற்றும் நடிகருமான சசிகுமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கான படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில்,படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இவை அனைத்தையுமே ஆறே நாட்களில் இசை அமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா. தற்பொழுது பிரசாத் ஸ்டுடியோவில் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கரகாட்டத்தை மையப்படுத்தி இளையராஜா இசையமைப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கரகாட்டகாரன் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top