இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

karunanidhi_1_0_2இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று டெசோ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசின் நடவடிக்கை தேவை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சேவை அனுமதிக்க கூடாது என்றும், ஐ.நா மனித உரிமை குழுவினர் இந்தியா வர விசா வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top