அஜீத் படத்தை இயக்கும் ஷங்கர்!

அஜீத் வீரம் படத்திற்கு பின் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் அனுஷ்கா இணைந்து நடிக்கிறார்.இந்தப் படத்தை அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜீத் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.இயக்குனர் ஷங்கர், ரஜினிக்காக தயார் செய்த கதையை அவரிடம் கூறியுள்ளார்.கதையை கேட்ட ரஜினி இந்த கதைக்கு அஜீத் தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினி சொன்னதால், அஜீத்தும் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top