வடக்கு மாகாணத்துக்கு அதிகாரம் வழங்க முடியாது: இலங்கை திட்டவட்டம்!

sp dissanayakeவடக்கு மாகாண சபைக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் நிலம், காவல்துறை அதிகாரங்கள் அடங்கிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ள நிலையில், இலங்கை உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்களை வடமாகாண சபைக்கு வழங்கினால் அங்கு மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டமும், விடுதலைப் புலிகளின் மீளெழுச்சியும் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஐரோப்பியாவில் முழுமையான இயக்கத்தை கொண்டிருக்கின்றனர் என்று கூறிய அமைச்சர், இந்த நிலையில் அவர்களை யாழ்ப்பாணத்துக்குள் அனுமதித்தால் அங்குள்ள மக்களே பாதிக்கப்படுவர் என்றும், எனவே மீண்டும் பயங்கரவாதம் உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமாகாண சபையும் கோருவதை கொடுக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top