தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சியாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் ஆர்.கே. சாலை, அமைந்தகரையில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top