ஆந்திரா, தெலங்கானா சிறப்பு வரிச் சலுகையை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்: ஜெயலலிதா!

jayalalithaஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அறிவித்துள்ள சிறப்பு வரிச் சலுகையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அறிவித்துள்ள சிறப்பு வரிச் சலுகையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த வரிச் சலுகை மாநிலங்களுக்கு இடையே சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

அண்டை மாநிலங்களுக்குச் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுவிட்டதே என்ற காழ்ப்புணர்ச்சியில் இதை கூறவில்லை. ஆனால், வரிச் சட்டப்பிரிவு 94(1)-ன் படி, இவ்விரு மாநிலங்களிலும் முதலீடு செய்வதற்கு சிறப்பு வரிச் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதே கவலை அளிக்கிறது.

இந்த சிறப்பு வரிச் சலுகையால் மாநிலங்களுக்கு இடையில் சமச்சீரில்லாத போட்டி ஏற்படும். ஒரு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் போது, சில பொருளாதார சூழ்நிலைகளைக் காரணம் கூறி, சிறப்பு வரிச் சலுகை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சிறப்பு வரிச் சலுகைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

ஆனால், அந்த வரிச்சலுகை காலத்தை நீட்டிப்பது, தமிழகத்தில் இருந்து சில தொழில் நிறுவனங்கள் வெளியேறி ஆந்திரா, தெலங்கானாவில் தொழில் தொடங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் ஆதாயத்துக்காகவும், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்கு சிறப்பு வரிச்சலுகை செய்யப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா வரிச் சலுகையால், அண்டை மாநிலமான தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது. எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top